இ-குழு (இ-கமிட்டி) பற்றி
இந்திய உச்சநீதிமன்றத்தின் இ-குழு(இ-கமிட்டி), இந்தியாவில் நீதித்துறை பின்பற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) முன்முயற்சிகளைக் காட்சிப்படுத்தும் இவ்விணைய தளத்திற்கு தங்களை வரவேற்கிறது. “2005 ஆம் ஆண்டு இந்திய நீதித்துறையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் கீழ் கருத்தியல் செய்யப்பட்ட மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்புடைய நிர்வகிக்கும் குழுவாக இந்த இ-குழு செயல்படுகிறது. இந்திய நாட்டில் உருவான மின்னணு நீதிமன்றங்கள் என்னும் இத்திட்டம் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதிபங்களிப்போடு நீதித்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் வாயிலாக, நாடு முழுவதும் நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
திட்டத்தின் கண்ணோட்டம்
- இணையவழி நீதிமன்றங்கள் திட்ட வழக்காடிகளின் உரிமை ஆவணத்திற்கிணங்க குடிமக்களுக்கு முனைப்பான மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக சேவைகளுக்கு வகைசெய்தல்.
- நீதிமன்றங்களில் சிறப்பான நீதி வழங்கல் ஏற்பாட்டு முறைகளை உருவாக்குதல், நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல்.
- உரிமை உடையர்களுக்கு, பொறுப்பாளர்களுக்கு, தகவல்களை எளிதாகப் பெறும் வகையில் செயல்முறைகளைத் தானியக்கமாக்குதல்.
- தர அளவிலும் எண்ணிக்கையிலும் நீதித்துறையின் ஆக்கத்திறனை மேம்படுத்துதல், அணுகத்தக்க, செலவு குறைந்த, நம்பகமான மற்றும் வெளிப்படையான நீதி வழங்கல் ஏற்பாட்டு முறைக்கு வகை செய்தல்.