Close

    உயர் நீதிமன்றங்களுக்கான தேசிய நீதிமன்ற தரவுத் தொகுப்பு துவங்கிவைத்தல்

    Publish Date: April 19, 2021
    njdg-launch

    மாண்புமிகு நீதியரசர் டாக்டர். D.Y. சந்திரசூட், தலைவர், இ-குழு (இ-கமிட்டி), திரு. துஷார் மேத்தா, இந்திய அரசு தலைமை வழக்குரைஞர், திரு. பருன் மித்ரா, செயலாளர் (நீதி), மாண்புமிகு நீதியரசர் திரு.R.C. சவான், துணைத் தலைவர், இ-குழு (இ-கமிட்டி), திரு. சஞ்சீவ் கல்கோன்கர், இந்திய உச்சநீதிமன்ற பொதுச்செயலாளர் மற்றும் ஏனைய மின்-குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் 3/7/2020 அன்று K.K.வேணுகோபால், இந்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்கள் உயர் நீதிமன்றங்களுக்கான தேசிய நீதிமன்ற தரவுத் தொகுப்பினைத் தொடங்கி வைத்தார் .
    தேசிய நீதிமன்ற தரவுத் தொகுப்பு (NJDG) என்பது நெகிழ் தன்மைக்கொண்ட தேடல் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட வழக்குத் தரவுகளின் களஞ்சியமாகும். 23/07/ 2020 அன்றுள்ள நிலவரப்படி, மாவட்டம் மற்றும் வட்டம் நீதிமன்றங்களுக்காக நிலுவையில் உள்ள 3,34,11,178 வழக்குகளின் தரவு தேசிய நீதிமன்ற தரவுத் தொகுப்பில் உள்ளன. இந்த தரவுகளை
    https://njdg.eCourts.gov.in/njdgnew/index.php – என்ற இணையதள முகவரியில் பெறலாம்.


    உயர் நீதிமன்றங்களுக்கான நிலுவையில் உள்ள 43,76,258 வழக்குகளின் தரவுகள் தேசிய நீதிமன்ற தரவுத் தொகுப்பில் உள்ளன. மேலும் அவற்றை
    https: //njdg.eCourts.gov.in/hcnjdgnew/ என்ற இணையதள முகவரியில் பெறலாம்.


    தேசிய நீதிமன்ற தரவுத் தொகுப்பின் உருவாக்கம் உலக வங்கியால் பாராட்டப்பட்டது. மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குதல் தரவரிசையில் இந்தியா 20 இடங்கள் முன்னோக்கி செல்வதற்கு பங்களித்துள்ளது(Ease of Doing Business).