Close

    மின்னனு சிறைசாலை

    இணையவழியாகச் சிறைச்சாலைகளின் ஆவணங்கள் பராமரிப்பு

    இணையவழியாகச் சிறைச்சாலைகளின் ஆவணங்களின் பராமரிப்புப் பயன்பாட்டுத் தொகுப்பானது, சிறை மற்றும் கைதிகள் நிர்வாகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கிறது. குற்றவியல் நீதி அமைப்பில் ஈடுபட்டுள்ள நீதிமன்றங்கள், சிறை அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிகழ்நேர சூழலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய முக்கிய தகவல்களை இது வழங்குகிறது. இணையவழி வருகை கோரிக்கை மற்றும் குறை தீர்க்கும் வசதிகளை இது எளிதாக்குகிறது.

    இந்த பயன்பாட்டுத் தொகுப்பு மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது:

    • 1. இணையவழியாகச் சிறைச்சாலைகளின் மேலாண்மைத் தகவல் அமைப்பு: சிறைச்சாலைகளின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் நிர்வாகம் தகவல் அமைப்பு.
    • 2. தேசிய சிறைச்சாலைகள் தகவல் வலைவாசல்: தேசிய சிறைச்சாலைகள் தகவல் வலைவாசல் என்பது நாட்டின் பல்வேறு சிறைகளின் புள்ளிவிவர தரவுகளைத் தெரிவிக்கின்ற, குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு வலைவாசல் ஆகும்.
    • 3. காரா பஜார்: நாட்டின் பல்வேறு சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை காட்சிக்கு வைப்பதற்கும் விற்பனை செய்வதற்குமான வலைவாசல்.

    இணையவழிச் சிறைச்சாலைகள் வலைத்தளம்