Close

    முகவுரை

    இந்திய நீதிமன்றங்களில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கான தேசியக் கொள்கை மற்றும் செயல்திட்டத்தை வகுத்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் வாயிலாக இந்திய நீதித்துறையை சீரமைப்பதற்கான ஒரு மாபெரும் தேவையை உணர்ந்து, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி திரு. ஆர்.சி.லஹோட்டி அவர்கள் இ-குழு அமைக்கப் பரிந்துரைத்தார். இந்திய நீதித்துறை, காலத்திற்கேற்ப அதனைத் தகவமைத்துக் கொள்ளவும், நீதி வழங்கல் ஏற்பாட்டு முறையைத் திறன்மிக்கதாக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்தொடர்புக் கருவிகளை பயன்படுத்தவும், அதன் பல்வேறு பொறுப்பாளர்கள் பயனடையும் வகையில் ஒரு தேசிய கொள்கையை வகுப்பதில் இ-குழு உதவ வேண்டியிருந்தது. அதன் பின்னர், இ-குழுவால் உருவாக்கப்பட்ட தளங்கள், பொறுப்பாளர்கள் – வழக்காடிகள், வழக்கறிஞர்கள், அரசு / சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சாதாரண குடிமக்கள், நீதிமன்றங்களின் தரவுகளையும் தகவல்களையும் உடனுக்குடன் பெறுவதற்கு உதவி வருகிறது.

    இந்த மின்னணு தரவுத்தொகுப்பு மற்றும் தகவல் பரிமாற்ற தளங்கள் பின்வருவனவற்றைச் செயல்படுத்துகின்றன, அவையாவன:-

    • நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட வழக்கின் நிலை மற்றும் விவரங்களைக் கண்டறிதல்.
    • நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதித்துறை அமைப்புகளில் நிலுவையிலுள்ள விவகாரங்களை நிருவகித்தல்.
    • வழக்குகளின் வகைகளை விரைவாகக் கண்டறியும் வகையில் தரவுத்தளத்திலிருந்து தகவலைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்துதல்.
    • நீதிமன்ற வளங்களைத் திறம்பட பயன்படுத்துதல்.
    • நீதித்துறையின் திறன்களையும் செயல்திறனையும் கண்காணிக்கவும் கட்டமைக்கவும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்.