மின்னணு நீதிமன்ற மூன்றாம் கட்டத் திட்டத்திற்கான வரைவு தொலைநோக்கு ஆவணத்தின் மீதான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
“இந்திய நீதித்துறையில் 2005 ஆம் ஆண்டு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை(ICT) செயல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் கீழ் கருத்தாக்கப்பட்ட மின்னணு நீதிமன்ற திட்ட செயல்பாட்டினை உச்ச நீதிமன்ற ஈ-கமிட்டி மேற்பார்வையிட்டு வருகிறது. இது நீதித் துறையால் முன்னெடுக்கப்பட்ட பணிமுறை (Mission Mode) திட்டமாகும்.”
ஈ-கமிட்டியின் பங்கு மற்றும் பொறுப்புகள் கடந்த 15 வருடங்களில் பரிணாமம் அடைந்துள்ளது.
ஈ-கமிட்டியின் நோக்கங்கள்:
• நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களை ஒருங்கிணைத்தல்
• இந்திய நீதித்துறையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) செயல்படுத்துதல்.
• நீதித்துறையின் ஆக்கத்திறனை மேம்படுத்துதல்.
• அனைவராலும் அணுகக்கூடிய, செலவீனம் குறைந்த, வெளிப்படை தன்மையுடைய மற்றும் பொறுப்பேற்கும் தன்மை கொண்ட நீதி வழங்கும் முறையை உருவாக்குதல்.
• குடிமக்களை மையப்படுத்தும் சேவைகளை வழங்குதல்.
இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளதால், மூன்றாம் கட்டத்திற்கான வரைவு தொலைநோக்கு ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு தொலைநோக்கு ஆவணம் மின்னணு நீதிமன்ற மூன்றாம் கட்டத் திட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கான பரந்த நோக்குடைய, விரைவான, வெளிப்படை தன்மையுள்ள, பயனர் சார்ந்த தொலைநோக்குப் பார்வையை விவரிக்கிறது.
மூன்றாம் கட்ட நிகழ்நிலை அல்லாத செயல்முறையை உள்ளது உள்ளவாறே துடிம முறையில் பின்பற்றாமல், நீதி வழங்குதலை அனைவருக்குமான ஒரு சேவையாக துடிம நீதிமன்றங்கள் (Digital Courts) மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்நோக்குகிறது. ஆகவே, நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு காந்திய சிந்தனையின் இரண்டு மைய அம்சங்களான அணுகுதல் மற்றும் உட்படுத்துதல் போன்றவற்றால் வழிநடத்தப்படும். கூடுதலாக நம்பிக்கை, ஒத்துணர்வு, நீடிப்புத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற முக்கிய பண்புகள், அடைய வேண்டிய தொலைநோக்கை எட்டுவதற்கு பாதுகாப்பு அரணாக விளங்கும்.
இத்திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் ஏற்படுத்துப்பட்ட வளர்ச்சிகளை மேம்படுத்தும் விதமாக, இவ்வாவணம் (அ) நடைமுறைகளை எளிமையாக்குதல், (ஆ) துடிம உட்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் (இ) சரியான நிறுவன மற்றும் பரிபாலன கட்டமைப்பை நிறுவுதல், அதாவது, தொழில்நுட்ப அலுவலகங்களை பல்வேறு நிலைகளில் அமைப்பதன் மூலம் நீதித்துறை, தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தல் போன்றவற்றின் மூலம் நீதிமன்றங்கள் அதிவிரைவாக துடிம மயமாக்கப்பட வேண்டிய தேவையை எடுத்துரைக்கிறது. துடிம உட்கட்டமைப்புகளையும், அதன் சேவைகளையும் நிலைநாட்டுவதை அடிப்படை நோக்கமாக மூன்றாவது கட்டப்பணிகள் எடுத்தியம்புகிறது.
இந்த தொலைநோக்கு ஆவணம், பல்வேறுவகைப்பட்ட துடிம சேவைகள் காலப்போக்கில் மேலும் வளச்சியடையவதற்கு வழிவகுக்கும் ஒரு தொழில்நுட்ப தள கட்டமைப்பை எதிர்நோக்குகிறது. மேலும் இது குடிமை சமூக தலைவர்கள், பல்கலைக்கழகங்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு வகையில் சம்மந்தப்பட்டவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்ற ஈ-கமிட்டி சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும், மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவதற்கு மின்னணு நீதிமன்றங்கள் மூன்றாம் கட்டத் திட்டத்திற்கான வரைவு தொலைநோக்கு ஆவணம் மீதான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது.
வரைவு தொலைநோக்கு ஆவணத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
வரைவு தொலைநோக்கு ஆவணம் பற்றிய ஆலோசனைகள் / தகவல்களை சமர்ப்பிக்க, இங்கே சொடுக்கவும்.
தகவல்கள் பெற கடைசி தேதி – மே 31, 2021.