Close

    தேசிய அளவில் மின்னனு கட்டளைகளை நிறைவேற்றல் மற்றும் தடம் அறிதல்

    NSTEP

    அழைப்பாணை என்ஸ்டெப் (தேசிய அளவிலான மின்னணு கட்டளைகளை நிறைவேற்றுதல் மற்றும் தடம் அறிதல்) பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்படுவதே வழக்குகள் விரைவாக முடிப்பதில் தவிர்க்கமுடியாத காலதாமதம் ஏற்படுவதற்கான காரணமாகும். NSTEP என்பது வலை பயன்பாடு மற்றும் செய்முறையை சீரமைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட முழுமையான அலைபேசி செயலியுடன் கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட சேவை கண்காணிப்பு செயலி செய்முறையாகும். வழக்குமன்ற நிறைவேற்றாளர் மற்றும் கட்டளை நிறைவேற்றுனர் வழங்கப்படும் NSTEP அலைபேசி செயலியானது, நகழ் நேரத்தில் அறிவிப்புகள் மற்றும் அழைப்பாணைகளை வெளிப்படைத்தன்மையுடன் சார்வு செய்வதற்கு வகை செய்யும். CIS மென்பொருள் வாயிலாக, அந்தந்த நீதிமன்றங்களால் இச்செய்முறை பின்பற்றப்பட்டவுடன், இவை, மின்னணு வடிவத்தில் NSTEP வலை பயன்பாட்டில் கிடைக்கப்பெறும். வழக்குமன்ற நிறைவேற்றாளரின் அதிகாரவரம்பெல்லைக்குள் இடைநிலை ஆள்வரைக்குள் சேவை வழங்கப்பட வேண்டுமாயின், NSTEP வலை பயன்பாடு, அவர்களுக்கு வெளியிடப்பட்ட கட்டளைகளை ஒதுக்கீட்டிற்கு வகைசெய்யும். மாவட்டங்களுக்கிடையே அல்லது மாநிலங்களுக்கிடையே அந்தந்த நீதிமன்ற நிர்வாகங்களுக்கு வெளியிடப்பட்ட கட்டளைகளை ஒதுக்கீடு செய்வதற்கும் இவை உதவும்.

    கட்டளை நிறைவேற்றாளர், NSTEP அலைபேசி செயலியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டளைகளை காணலாம். கட்டளை நிறைவேற்றாளர்களுக்கு நீதிமன்றத்தின் சேவை தொகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டிராய்டு கணித்திறக் கைபேசிகள் வழங்கப்படும். GPS அமைவிடம், பெறுபவரின் அல்லது வளாகத்தின் (அளிப்பதற்கு ஏதுமில்லாதபோது) புகைப்படம், பெறுபவரின் கையொப்பம் மற்றும் சேவை செய்யாததற்கு அவ்விடத்திலேயே காரணங்களை பதிவு செய்தல் போன்றவற்றை கட்டளை நிறைவேற்றாளர் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட தரவுகள் உடனடியாக மைய NSTEP செயலிக்கு தெரிவிக்கப்படுகிறது. கட்டளைகளின் வழங்கல் நிலையினை நீதிமன்றங்கள் கண்டறிவதற்கு ஏதுவாக, NSTEP வலை செயலியிலிருந்து CIS-க்கு தரவு அனுப்பப்படும். எனவே, NSTEP பின்வரும் குறிப்பிடத்தக்க இலக்குகளை நிறைவேற்றும்:-

    • மின்னணு வடிவத்தில் அறிவிப்புகள்/அழைப்பாணைகள் சார்வு செய்ய வகை செய்தல்.
    • தொலைதூர இடங்களில், அழைப்பாணை/ கட்டளை சார்வில் ஏற்படும் காலவரையற்ற காலதாமதங்களை குறைப்பதற்கு, உரிய நேரத்தில் நாளது வரையாக்கல்களை வெளியிட்டு பதிவு செய்தல்.
    • மின்னணு முறையால் சார்வு செய்வதின் வாயிலாக, அஞ்சல் வழியாக மாவட்டங்களுக்கிடையே அல்லது மாநிலங்களுக்கிடையே சார்வு செய்ய தேவைப்படும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
    • நீதிமன்ற அழைப்பானை மற்றும் அழைப்பாணை/கட்டளையை சார்வு செய்வதை சம்பந்தபட்டவகளால் வெளிப்படையாக கண்பாணிக்க முடிகிறது.
    • புவன் நிலவரைபடங்களுடன் (இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் புவி தளம்) GPS இணைப்பு