Close

    ஆஷிஷ் ஜே.சிரதோங்கர்

    ASHISH J. SHIRADHONKAR
    • பதவிப்பெயர்: அறிவியலாளர்-F, இணைய வழி நீதிமன்றங்கள் திட்டப்பணியின் துறைத்தலைவர்

    மரத்வடா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். பிட்ஸ் பிலானியில் மென்பொருள் அமைப்புகள் – இல் முதுநிலை அறிவியல்(M.S) பட்டமும், புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டமும் பயின்றார். மின்-ஆளுகைத் துறையில் 25 ஆண்டுகள் அனுபவமும் நீதித்துறையில் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் 22 ஆண்டுகள் அனுபவமும் பெற்றவர்.


    • 1994 ஆம் ஆண்டு அறிவியல் அலுவலர் / பொறியாளர் “S.B”ஆக தேசிய தகவலியல் மையத்தில் பணியில் சேர்ந்தார். லாதூரில் மாவட்ட தகவலியல் அலுவலராகவும், நந்தேத்-இல் மாவட்ட தகவலியல் அலுவலராகவும், புனே தேசிய தகவலியல் மையத்தில் மேலாளராகவும் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் நாந்தேத்-இல் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் டி.சி.ஐ.எஸ் (DCIS)-ஐ நடைமுறைப்படுத்தினார்.
    • 2005 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர நீதிமன்றங்களில் திறந்த-நிலை தொழில்நுட்பத்தினாலான ‘வழக்கு தகவல் ஏற்பாட்டு முறை (CIS) ஒன்றை உருவாக்கி செயல்படுத்தினார்.
    • புனே-இல் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் மென்பொருள் மேம்பாட்டு அலகின் இணையவழி நீதிமன்றங்களுக்கான திட்டப்பணி துறைத்தலைவராக இருந்தார்.