தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு
இணைய வழி நீதிமன்றங்கள் திட்டப்பணி ஆதரவின் கீழ் செயல்படுத்தப்பட்ட முதன்மை திட்டமான தேசிய நீதிமன்ற தரவு தொகுப்பானது, அலுவல் பணியினை எளிதாக்கும் முயற்சியின் கீழ், இந்திய அரசின் ஒரு குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வலைவாசல் என்பது நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் நிலுவையில் உள்ள மற்றும் தீர்வு காணப்பட்ட வழக்குகள் தொடர்பான தரவுகளின் ஒரு தேசிய களஞ்சியமாகும். வழக்குகளை திறம்பட தீர்த்து வைப்பதற்கு வழிவகுக்குவும் வழக்குகளை திறம்பட நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவும் மீள் தேடல் தொழில்நுட்பத்தின் கோட்பாட்டினை கொண்டு இந்த வலைவாசல் உருவாக்கப்பட்டுள்ளது.
வலைவாசலில் பதிவேற்றப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட தரவு பின்வருமாறு பெறப்படலாம் மற்றும் பகுப்பாய்வு செய்யப்படலாம்: –
- வகை வாரியாக
- ஆண்டு வாரியாக
- மாநில வாரியாக
- நிறுவனங்களில் மாதந்தோறும் வழக்குகளுக்கு தீர்வு காணுதல்
- ஒரு வழக்கின் அசல் / மேல்முறையீடு / நிறைவேற்றுதல் நிலைகளில்
- காலதாமதத்திற்கான காரணங்கள்
நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தொடரப்பட்ட வழக்குகள், தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவையாக உள்ள வழக்குகளின் தொகுக்கப்பட்ட கணக்குகளை தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு அளிக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள், ஒவ்வொரு நாளும் தொடர்புடைய நீதிமன்றங்களால் புத்தாக்கம் செய்யப்படுகின்றன. தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையையும், நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும் இந்த வலைத்தளம் காட்டுகிறது. பார்வையாளர், குறிப்பிட்ட வழக்கு தொடர்பான தகவலை வலைதளத்திலிருந்து அறிந்து கொள்ள இயலும். நிலுவையிலுள்ள வழக்குகள் அனைத்தும் உரிமையியல் மற்றும் குற்றவியல் அதிகார எல்லைகளுக்குட்பட்டு பிரிக்கப்படுகின்றன. மேலும் அவை, கால அளவு வாரியான வகைப்பாடுகளாக, அதாவது 10 ஆண்டுகள் பழமையான வழக்குகள், 5 முதல் 10 ஆண்டுகள் வரை பழமையான வழக்குகள் என்று பிரிக்கப்படுகின்றன. தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் நிலுவையிலுள்ள தரவு வெளிப்படையாகவும் பொது செயற்களப்பகுதியிலும் கிடைக்கப்பெறும்.
- தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பு (இந்திய உயர் நீதிமன்றங்கள்)
- தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பு ( இந்தியாவிலுள்ள மாவட்ட மற்றும் தாலுக்கா நீதிமன்றங்கள்)