அமோல் கே. அவினாஷ்
மகாராஷ்டிரம், அமராவதியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியலில் (கணினி அறிவியல்) பட்டம் பெற்றவர். இவர் அறிவியலாளர்-F-ஆக பதவி வகித்து இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணிக்கான பல்வேறு செயலிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஈடுபட்டிருந்தார்.
• தேசிய தகவலியல் மையத்தில் “SB” அறிவியல் அதிகாரியாக 1997 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து, மும்பையிலுள்ள பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டார்.
• பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மேலாண்மை மென்பொருளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் ஆகிய பணிகளில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் பணியாற்றினார்.
• புனே-இல் உள்ள மென்பொருள் மேம்பாட்டு பிரிவில் பணியாற்றினார்.
• இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணியில் 2016ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சேர்ந்தார்.