மெய்நிகர் நீதிமன்றங்கள்
மெய்நிகர் நீதிமன்றங்கள் என்பது, வழக்காடிஅல்லது வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்த்து, மெய்நிகர் தளத்தில் வழக்கு தீர்க்கும் கோட்பாடாகும். நீதிமன்ற வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கும், சிறிய வழக்குகளை தீர்த்து வைப்பதற்கான ஒரு திறன்மிகு வளாகத்தை வழக்குரைஞர்களுக்கு அளிப்பதற்காக இவை உருவாக்கப்பட்டுள்ளன. முழு மாநிலத்திற்கும் நீட்டிக்கப்படக்கூடிய அதிகார வரம்பெல்லையுடன் வாரத்தின் அனைத்து நாட்களிலும் (24X7) செயல்படும் வகையில் மெய்நிகர் மின்னணு தளத்தில், நீதிபதி ஒருவரால் மெய்நிகர் நீதிமன்றம் நிருவகிக்கப்படலாம். முனைப்புடன் தீர்ப்பு வழங்குவதற்கு வழக்குரைஞர் அல்லது நீதிபதி ஒரு நீதிமன்றத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. தகவல்தொடர்பு மின்னணு வடிவத்தில் மட்டுமே இருக்கும். மேலும் தண்டனை, அபராதம் அல்லது இழப்பீடு செலுத்துதல் இணையவழியில் மேற்கொள்ளப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை முன்கூட்டியே ஒப்புக் கொள்கின்ற அல்லது அழைப்பாணையில் பேரில் எதிர் மனுதாரர் இத்தகைய நீதிமன்றங்கள் காரணத்தை முன் கூட்டியே மின்னணு வடிவத்தில் இனைத்து வழக்குகளை தீர்வு செய்வதற்கு இத்தகைய நீதிமன்றங்கள் பயன்படுத்தப்படலாம். அபராதத் தொகை செலுத்திய பின்னர் அத்தகைய விவகாரங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கருதப்படலாம். மெய்நிகர் நீதிமன்றங்களால் திறன்பட கையாளப்படக்கூடிய வழக்கு வகையினை முதலில் கண்டறிவது இன்றியமையாதது என்பதால், தற்போது, முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக, மெய்நிகர் நீதிமன்றங்களில், பின்வரும் வழக்கு வகைகள் விசாரணை செய்யப்படுவதற்கு கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:-
1. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்கள் (போக்குவரத்து செலுத்துச் சீட்டு வழக்குகள்)
2. பிரிவு 206-இன் கீழ் அழைப்பாணைகள் வழங்கப்படக்கூடிய சிறு குற்ற வழக்குகள்
Visit : http://vcourts.gov.in