நோக்கம் / குறிக்கோள்கள்
முக்கியக் கொள்கைகள்:
• “வலிமைப்படுத்துதல்” மற்றும் “இயக்குதல்” என்னும் நோக்கத்துடன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.
• தொழில்நுட்பம் என்பது வழக்கமான நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளின் தானியக்கமாக்கம் தொடர்பானதாக மட்டுமல்லாமல், மாற்றத்திற்கான ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். அனைத்து குடிமக்களையும் “வலிமைப்படுத்தும்” மற்றும் “இயக்கும்” ஓர் ஆற்றலாக இருக்க வேண்டும்.
• அனைவருக்கும் நீதி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்தல்.
• ஒவ்வொரு நபரும், யாதொரு “மின்னணு வேறுபாடு“ அல்லது ஏனைய சமூகப் பொருளாதார பாகுபாடு காரணமாகத் தடையின்றி, குறைதீர்ப்பு மற்றும் நிவாரணம் பெறுவதற்கு, நீதியமைப்பு ஒன்றை அணுகுவதற்கான வழிமுறைகளுக்கு வகைசெய்யப்பட வேண்டும்.
• திறமையான மற்றும் பொறுப்புமிக்க நீதித்துறைக் கட்டமைப்பை உருவாக்குதல்.
• நீதியமைப்பு, விரைவாக நீதி வழங்குவதற்கு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களின் திறன்களையும் செயல்திறனையும் கண்காணிக்கவும் கட்டமைக்கவும் “செயல்திறன் அளவீடுகளை” உருவாக்குவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
நோக்கங்கள்:
இ-குழு (இ-கமிட்டி) பின்வரும் நோக்கங்களைக் கொண்டு இயங்குகிறது:
• நாடு முழுவதிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் இணைத்தல்.
• இந்திய நீதித்துறை அமைப்பில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துதல்.
• தரஅளவிலும் எண்ணிக்கையிலும் நீதிமன்ற செயல்திறனை மேம்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கு உதவுதல்.
• நீதி வழங்கல் முறையை அணுகத்தக்கதாகவும், செலவு குறைந்ததாகவும், வெளிப்படையானதாகவும் பொறுப்புணர்வுடையாதகவும் ஆக்குதல்.
கட்டம் IIன் நோக்கங்கள்:
• தொடுதிரை முனையம் (Kiosks), வலைவாசல், கைபேசி செயலி, மின்னஞ்சல், கோரிப்பெறும் குறுஞ்செய்தி (SMS Pull), கோராமல் பெறும் குறுஞ்செய்தி (SMS Push) போன்ற பல்வேறு சேவை வழங்கல் முறைகள் வாயிலாக, வழக்குத் தொடருபவர்களுக்கு வழக்கு குறித்த தகவல்களை எளிதில் அளித்தல்.
• வழக்கறிஞர்களுக்கான வழக்குகளைத் திட்டமிடுதலும் பட்டியலிடுதலும்.
• வழக்கினை கையாளும் திறன் மேலாண்மையுடன் நீதித்துறை அதிகாரிகளுக்கான வழக்கு மேலாண்மை.
• முதன்மை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஏனைய நீதிபதிகளுக்கான மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு வசதிகள்.
• உயர்நீதிமன்றங்களால் மாநில அளவிலும், நீதித்துறை, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும் வழக்குகளின் நிலை மேற்பார்வை மற்றும் கண்காணித்தல்.
• நீதி வழங்கல் ஏற்பாட்டுமுறையினை, முறையாக மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குதல்.