Close

    திரு.அதுல் மதுக்கர் குரேகர்

    Atul Madhukar Kurhekar
    • இணையவழி அஞ்சல்: mp-ecommittee[at]aij[dot]gov[dot]in
    • பதவிப்பெயர்: உறுப்பினர் –செய்முறைகள்

    நாக்பூரில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். நாக்பூரிலுள்ள டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டவியல் பட்டத்தினைப் பெற்றுள்ளார். UBUNTU மற்றும் CIS ஆகியவற்றில் சான்றிதழ் பெற்ற முதன்மை பயிற்சியாளர் ஆவார். பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் கிளையிலும் நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்திலும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் எட்டு ஆண்டுகள் சட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    • 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இளநிலை உரிமையியல் நீதிபதியாகவும் முதல் நிலை நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் ஜனவரி 2004ல் இருந்து துணைப் பதிவாளராக பணியமர்த்தப்படும் வரையில் முதுநிலை உரிமையியல் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
    • 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் சிறு வழக்குகள் நீதிபதியாக நியமிக்கப்படும் வரையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் துணைப் பதிவாளராக (நீதித்துறை) பதவி வகித்தார்.
    • 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மகாராஷ்டிரா நீதித்துறைப் பயிலகத்தில் [Maharastra Judicial Academy] குழுமத்தில் பதவியேற்கும் வரையில் மும்பை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி வகித்தார்.
    • புனே மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் வரையில் நிர்வாக அலுவலராகவும் (ஜூலை,2009 – ஏப்ரல் 2011 ) பின்னர் மகாராஷ்டிரா நீதித்துறைப் பயிலகத்தில் கூடுதல் இயக்குநராகவும் (ஏப்ரல்,2011 – செப்டம்பர்,2013) பதவி வகித்தார்.
    • பதிவாளராகப் பதவியேற்கும் வரையில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் புனேவிலுள்ள மாவட்ட உதவி அமர்வு நீதிபதியாகவும் ,2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மும்பை மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதியாகவும் பதவி வகித்தார்.
    • இ-குழுமத்தின் உறுப்பினராக (செயல்முறைகள்) பதவியேற்கும் வரையில் பம்பாய் உயர்நீதி மன்றத்தின் பதிவாளராக (சட்டம் மற்றும் ஆராய்ச்சி) 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பதவி வகித்தார்.