இணைய வழி சேவைகள் மையம்

முன்னோடித் திட்ட அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் இணைய வழி சேவைகள் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கின் நிலை தொடர்பான தகவல் , தீர்ப்புகள் மற்றும் ஆணைகளின் நகல்களை வழக்காளர்கள் பெறுவதற்கு இது உதவுகிறது. இந்த மையங்கள், வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கும் வகை செய்கிறது. இந்த மையங்கள், சாதாரண மனிதனுக்கும் அவனது நீதியைப் பெறுவதற்கான உரிமைக்குமான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
இணைய வழி சேவைகள் மையத்தில் வழங்கப்படவுள்ள வசதிகள்
இணைய வழி சேவைகள் மையம், வழக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தொடக்கத்தில் பின்வரும் சேவைகளை வழங்கும்: –
- வழக்கின் நிலை, வழக்கு விசாரணைக்கான அடுத்த தேதி மற்றும் ஏனைய விவரங்கள் குறித்த விசாரணைகளைக் கையாளுதல்.
- சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான இணைய வழி நிகழ்நிலை விண்ணப்பங்களை எளிதாக்குதல்.
- அச்சு நகல் மனுக்களை ஸ்கேன் செய்தல், இணைய வழி கையொப்பங்களைச் இணைத்தல், அவற்றை சி.ஐ.எஸ் இல் பதிவேற்றம் செய்தல் மற்றும் தாக்கல் செய்யப்பட்ட எண்ணை உருவாக்குதல் போன்ற இணைய வழி மனுக்களை தாக்கல் செய்வதற்கு உதவுகிறது.
- இணைய வழியில் முத்திரைத் தாள்களை கொள்முதல் செய்தல்/பணம் செலுத்துதலுக்கு வகை செய்தல்.
- ஆதார் அடிப்படையிலான எண்மமுறை கையொப்பத்தைப் பெறுவதற்கும் விண்ணப்பிப்பதற்கும் வகை செய்தல்.
- ஆண்ட்ராய்டு மற்றும் IOS ற்கான இணைய வழி நீதிமன்றங்களின் கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு வகை செய்தல் மற்றும் வெளியிடுதல்.
- சிறைச்சாலையில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக இணையவழி முலாக்கத் (e mulakat) நியமனங்களை பதிவு செய்வதற்கு உதவுதல்.
- விடுப்பில் உள்ள நீதிபதிகள் பற்றிய வினாக்களைக் கையாளுதல்.
- மாவட்ட சட்ட உதவி மையம், உயர் நீதிமன்ற சட்ட உதவி மையம் மற்றும் உச்ச நீதிமன்ற சட்ட உதவி மையங்பளிலிருந்து இலவச சட்ட சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மக்களுக்கு வழிகாட்டுதல்.
- மெய்நிகர் நீதிமன்றங்களில் போக்குவரத்து விதிமீறல் ரசீதுகளை பைசல் செய்வதற்கு, மேலும் இணைய வழி போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறு குற்றங்களை தீர்வு செய்தல்.
- வீடியோ கான்பரன்ஸ் (காணொளி கூட்டத்தின்) வாயிலான நீதிமன்ற விசாரணைகளை ஏற்பாடு செய்வதற்கும் அதனை நடத்துவதற்குமான முறையை விளக்குதல்.
- நீதிமன்ற ஆணைகள்/ தீர்ப்புகளின் மென்நகல்களை மின்னஞ்சல், வாட்ஸாப் அல்லது கிடைக்கப் பெறக்கூடிய எந்த ஒரு பயன்முறையின் வாயிலாக வழங்குதல்.