மனோஜ் குமார் மிஸ்ரா
1987 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அவர் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்ட (MCA) படிப்பை முடித்து, ஆக்ராவில் உள்ள தேசிய தகவல் மையத்தில் (NIC) மாவட்ட தகவல் அலுவலராக 1988 ஆம் ஆண்டு சேர்ந்தார். கான்பூரில் உள்ள மத்திய கவால் துறையின் தகவல் தொழில்நுட்பம் செயல்பாட்டு திட்டத் தலைவராக 2001 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். சத்தீஸ்கர் மாநில தேசிய தகவல் மையத்தின் (NIC) மாநில தலைவராக 2001 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அவர் தேசிய தகவல் மைய சேவைகள் ஒருங்கிணைப்பகத்தின் (NICSI) நிர்வாக இயக்குனராகவும் 2020 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது மின்னணு நீதிமன்ற திட்டத்தின் துணை தலைமை இயக்குநராக தேசிய தகவல் மையத்தின் (NIC) தலைமையகத்தில் பணிபுரிந்து வருகிறார்,