பாரதி எஸ் ஜாதவ்

சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை அறிவியல்(M.Sc.) பட்டம் பெற்றவர். இவர் அறிவியலாளர்- C -ஆக, பதவி வகித்து இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணிக்கான பல்வேறு செயலிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதலில் ஈடுபட்டிருந்தார்.
- கோவா தேசிய தகவலியல் மையத்தில் 1998-ஆம் ஆண்டில் அறிவியல் / தொழில்நுட்ப உதவியாளர் “A” ஆக பணியில் சேர்ந்தார்.
- கோவா தேசிய தகவலியல் மையத்தில் 1998 முதல் மார்ச் 2000 வரையில் பணியாற்றி சேவை மேலாண்மைக் குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
- பூனே-வில் உள்ள மென்பொருள் மேம்பாட்டு அலகிற்கு 2000ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மாற்றப்பட்டு, சேவை மேலாண்மைக் குழுவில்(SMG) சேர்ந்தார்.
- இணையவழி நீதிமன்றங்கள் திட்டப்பணியில் 2003 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.