இணைய வழி நீதிமன்றங்கள் திட்டப்பணியின் கீழ் எய்தப்பட்ட குறிப்பிடத்தக்க மைல்கல்
- உலகில், வழக்கு தகவல் மற்றும் மேலாண்மை ஏற்பாட்டுமுறை அடிப்படையிலான மிகப்பெரிய இலவச திறந்தநிலை மென்பொருளை (FOSS) மேம்படுத்தல். இலவச திறந்தநிலை மென்பொருளை (FOSS) அடிப்படையாக கொண்ட தளம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், உரிம கட்டணம் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொடர்ச்சியான செலவு நீங்கலாக, நாட்டிற்கு ரூ.340 கோடி மதிப்பீட்டு மீதங்கள் ஏற்பட்டன.
- இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் “CIS நேஷனல் கோர் v3.2” வழக்கு மேலாண்மை மற்றம் தகவல் ஏற்பாட்டுமுறை மென்பொருளை உருவாக்குதல்.
- இந்தியாவிலுள்ள அனைத்து 22 உயர்நீதிமன்றங்களிலும் “CIS நேஷனல் கோர் v3.2”வழக்கு மேலாண்மை மற்றம் தகவல் ஏற்பாட்டு முறை செயல்படுத்தப்பட்டது.
- நாடு முழுவதுமுள்ள 3256 நீதிமன்ற வளாகங்களின் தரவுகள் தற்போது இணையவழியிலும் நகழ்நிலையில் கிடைக்கப் பெறுகிறது.
- 688 மாவட்ட நீதிமன்றங்களின் தனிப்பட்ட வலைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களின் 13.60 கோடி (1360 மில்லியன்) தரவுகள், தேசிய நீதித்துறை தரவு தொகுப்பில் (NJDG) (நிலுவை மற்றும் தீர்வு காணப்பட்டவை) உள்ளன.
- மொத்தம் 3.38 கோடி (338 மில்லியன்) வழக்குகளும் (நிலுவை) பல்வேறு உயர்நீதிமன்றங்களின் 12.49 கோடி ஆணைகளும் தீர்ப்புகளும் (1249 மில்லியன்) இணையவழியிலும் நிகழ்நிலையிலும் கிடைக்கப்பெறும்.
- இ-குழுவால் உருவாக்கப்பட்ட அலைபேசி செயலியை 4.54 மில்லியன் ஆண்டிராய்டு பயனாளிகள் தரவிறக்கம் செய்துள்ளனர்.