Close

    மாவட்ட நீதிமன்றங்களின் வலைவாசல்

    districts courts portal

    ஒரு மையப்படுத்தப்பட்ட வலைவாசலானது நாட்டிலுள்ள தனிப்பட்ட மாவட்ட நீதிமன்ற வலைதளங்களுக்கு பயனாளரை அழைத்துச் செல்ல வகை செய்கிறது. 688 மாவட்ட நீதிமன்ற வலைதளங்களுக்கான நுழைவாயிலாக செயல்படும் இந்த வலைவாசல் வழியாக ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றம் தொடர்பான தகவலை அணுக இயலும். ஒரு மாவட்டத்தில் பணிபுரியும் நீதித்துறை அதிகாரிகளின் பட்டியல், விடுப்பில் உள்ள நீதிபதிகளின் பட்டியல், முக்கியமான ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், நீதிமன்றங்களின் அதிகார வரம்புகள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகியவற்றை தனிப்பட்ட வலைதளங்கள் தெரிவிக்கும். வழக்கின் நிலை, நீதிமன்ற ஆணைகள், வழக்குப் பட்டியல் போன்ற நீதிமன்ற சேவைகள் தொடர்பான தரவு மற்றும் தகவல்கள் இந்த வலைவாசலில் உள்ளன. நீதிமன்ற வளாகங்களுக்கு செல்வதை தவிர்ப்பதற்கும் நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு கட்டடங்களின் சுமைகளைக் குறைப்பதற்குமான வகையில் இந்தத் தகவலை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம்.

    Visit : https://districts.ecourts.gov.in/