Close

    மின் நீதிமன்றங்கள்

    Digital Courts

    73) இந்திய நீதித்துறையின் பசுமை முன்னெடுப்பான மின் நீதிமன்றங்கள் வீட்டிலிருந்தபடியே வழக்குப் பதிவுகள்/ஆவணங்களைப் பார்வையிடுவதை எளிதாக்கி, நீதிமன்றங்களை காகிதமில்லா/மின்னிலமயமாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தொடர்பான அனைத்து வழக்கு ஆவணங்கள், குற்றப்பத்திரிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றை பார்க்க முடியும். கூடுதலாக, மின் நீதிமன்றங்கள் செயலி மேசைக்கணினி செயலியாக மட்டுமின்றி, ஒரு வலை செயலியாகவும் கிடைக்கிறது மற்றும் எந்த இயங்குதளத்திலும் இணைய உலாவி (browser)மூலமாக நேரடியாகத் திறக்க முடியும். இந்த ஆவணமானது வலைச் செயலியின் செயல்பாடுகளை உள்ளடக்கும்.

    முக்கிய அம்சங்கள்
    1. நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் முடிக்க பெற்ற வழக்குகளைக் கண்காணிக்கும் வசதி.

    2. ஆவணங்களைக் காண்பதற்கான வசதி.
    • இணைய வழியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை காண்பதற்கு
    • குற்ற அறிக்கைகளை காண்பதற்கு
    • இடைக்கால உத்தரவுகள்/தீர்ப்புகளை காண்பதற்கு

    3. ஆவணங்களில் குறிப்புகளைச் (annotations) சேர்க்கும் வசதி.

    4. ஜஸ்ட் இஸ்(JustIS) கைபேசி செயலி மூலம் குறிக்கப்பட்ட முக்கிய வழக்குகளைக் காண ஜஸ்ட் இஸ்(JustIS) கைபேசி செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

    5. குரல் உரை மாற்றும் வசதி (Voice to text conversion).

    6. தீர்ப்புகளைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி.

    7. ஆயத்த வார்ப்புருவைப் (readymade template) பயன்படுத்தி ODT கோப்புகளை தானாக உருவாக்கும் வசதி.

    8. eSCR மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அணுகும் வசதி.