நீதிமன்றங்கள் மற்றும் கோவிட்-19: நீதித்துறை செயல்திறனுக்கான தீர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல்
மாண்புமிகு (டாக்டர்) நீதியரசர் D.Y. சந்திரசூட் 17/06/ 2020 அன்று “நீதிமன்றங்கள் மற்றும் கோவிட்-19: நீதித்துறை செயல்திறனுக்கான தீர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல்” என்ற தலைப்பில் உலக வங்கியில் உரையாற்றினார்.
இந்த உரையின் போது, இந்தியாவில் உலகளாவிய கோவிட் -19 நோய் தொற்றுக்கு, உடனடி நீதித்துறை நிவாரணங்கள் குறித்து அவர் விவாதித்தார். இந்திய உச்சநீதிமன்றம் வழக்கின் கால வரம்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, இடைக்கால உத்தரவுகள் மற்றும் பிணை நிபந்தனைக்கான ஆணைகள் நீட்டித்து உத்தரவுகளை பிறப்பித்தது. உலகளாவிய நோய்தொற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர விசாரணைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் மின்னணுமுறையில் வழக்கு பதிவு காணொலிக்காட்சி வாயிலாக நீதிமன்ற விசாரணைகளை நடத்துவது குறித்தும் வழிகாட்டிநெறிமுறைகளில் வலியுறுத்தப்பட்டது.
இ-குழு அதன் மின்-தொடக்கமுயற்சிகள் வாயிலாக எய்தப்பட்ட மைல்கற்கள் குறித்தும் அவர் கலந்துரையாடினார். அவற்றில் பின்வருபவை அடங்கும்.
• பயன்படுத்தும்படி கிடைக்கக்கூடிய வெளிப்படையான மென்பொருள் வள ஆதாரங்களின் அடிப்படையிலான வழக்கு தகவல் மற்றும் நிர்வாக முறையை மேம்படுத்துதல்.
• நீதிமன்ற வளாகங்களில் மின்- சேவை மையங்கள்.
• சிறிய குற்றத்தை ஒப்புக்கொள்வது மற்றும் இணையவழி அபராதத்தொகை செலுத்துதல் அல்லது குற்றம் ஒப்புக்கொள்ளப்படாவிட்டால் வழக்கை எதிர்த்துப் போராடுவதற்கான விருப்பத்துடனான, சிறிய போக்குவரத்து குற்றங்களுக்கான இணையவழி நீதிமன்றங்கள் தொடங்குதல்.
• நாட்டின் அனைத்து மாவட்டம், வட்டம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மற்றும் தீர்வு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான தரவுகளின் தேசிய களஞ்சியமாக/கருவூலமாக ஒரு தேசிய நீதிமன்ற தரவுத் மின்தொகுப்பை உருவாக்குதல்/மேம்படுத்துதல்.
• அழைப்பாணைகளின் கட்டளைகளின் சேவையில் தாமதம் ஏற்படுவதை சமாளிப்பதற்கு புவியிடம் காட்டியால்(GPS) செயல்படக்கூடிய NSTEP மென்பொருள் பயன்பாடு உருவாக்குதல்.
• உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்த்தல், ஒரேமாதிரியான தன்மை கொண்ட வழக்குகளைக் கண்டறிதல், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வழக்குகளின் தற்போதைய நிலையை கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு.
மிகப்பெரிய வழக்காடியாக அரசாங்கம், வரும் விளைவுகளை முன்பே தெரிந்து, தீர்வு காண்பதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
“நம் செயல்முறைகள் நமது கொள்கைகளைப் போன்று பழைமையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று இங்கிலாந்து அரசு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய சேவைகளின் தலைமை நீதிபதி சூசன் ஹூட் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் நேரடியாக அணுகுவதன் தேவையை தொழில்நுட்பம் மாற்றியுள்ளது. நீதித்துறை நிர்வாகத்தை குடிமக்களுக்கு ஒரு சேவையாக கருத வேண்டிய அவசியம் உள்ளது. அனைவருக்கும் பொதுவான நீதியளிக்கும் அமைப்பான (Inclusive Justice) இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இணையவழி – நீதிமன்றங்களின் முயற்சிகளுக்கான கணினியுடன் தொடர்புகொள்வதற்கு பயன்பாட்டாளர்களுக்கான திட்டத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், நீதித்துறையை அணுகுவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களை பயனாளிகளை மைய்யமாக கொண்ட மாதிரியை மனதில் கொண்டு வடிவமைப்பதன் வாயிலாக இந்த இலக்கினை அடைய முடியும்.
எதிர்காலத்திற்கான மற்றவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல், நிலைத்தன்மை மற்றும் ஒளிவுமறைவற்றத் தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பவற்றை அவர் வலியுறுத்தினார். இதற்கு அரசு, சட்டத்துறை, தனியார் துறை மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்களிடையே ஆலோசனை பெறவேண்டியது அவசியமாகிறது. மக்கள் கருத்தறியும் வழிமுறைகள் இடைவெளியை குறைப்பதற்கு அனைவருக்கும் பொதுவான கட்டமைப்புகளை (inclusive frame works) உருவாக்குதல், பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தல், நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்கள் தரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சீரான தன்மையை பராமரித்தல் ஆகியவற்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், வலுவான தரவு பாதுகாப்பு மற்றும் தரவு இடம்பெயர்வு முறை ஒரு வலுவான தன்மையைக் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.