Close

    மாண்புமிகு நீதியரசர் முனைவர் திரு.தனஞ்செய.Y.சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதி

    2020082939-ouochc3vg48n67zh41untu8p6n80fjw176qvd94ykw
    • பதவிப்பெயர்: தலைமைப்புரவலர் மற்றும் தலைவர்

    புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பொருளியல் துறையில் கௌரவ இளங்கலை பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வி மையத்தில் சட்டத்துறையில் இளங்கலை பட்டமும், மற்றும் அமெரிக்காவில் உள்ள உறார்வேர்டு சட்டக்கல்லூரியில் சட்டத் துறையில் முதுகலை மற்றும் சட்ட அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். மகாராஷ்டிரா வழக்குரைஞர் கழகத்தில் பதிவு செய்து பெரும்பாலும் பம்பாய் உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்சநீதிமன்றத்திலும் பணியாற்றினார். 1988ல் இவர் முதுநிலை வழக்குரைஞராகவும், இந்தியாவின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார்.

    மும்பை பல்கலைக்கழகத்தின் ஒப்பியல் அரசியலமைப்பு சட்ட கௌரவ விரிவுரையாளராக இருந்தார். அமெரிக்காவில் உள்ள ஓக்லகோமா பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக இருந்தார்.

    ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக்கழகம், உறார்வேர்டு சட்டக்கல்லூரி, ஏல் சட்டக்கல்லூரி மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வித்வாட்டர்ஸ்ரேண்டு பல்கலைகழகத்தில் விரிவுரைகள் வழங்கியுள்ளார். ஐக்கிய நாடுகளில் மனித உரிமை உயர்மட்ட ஆணையம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட ஐக்கிய நாடு அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் பேச்சாளராக பங்கேற்றுள்ளார்.

    29 மார்ச் 2000ல் பம்பாய் உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். மகாராஷ்டிரா நீதித்துறை பயிலகத்தின் இயக்குநராக பதவி ஏற்றார்.

    31 அக்டோபர் 2013 அன்றிலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

    13 மே 2016 அன்று, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

    9 நவம்பர் 2022 அன்று இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.