Close

    திருமதி. ர. அருள்மொழி செல்வி

    R Arulmozhiselvi
    • இணையவழி அஞ்சல்: hr-ecommittee[at]aij[dot]gov[dot]in
    • பதவிப்பெயர்: உறுப்பினர் – மனித வளங்கள்

    28.05.2020 முதல் இந்திய உச்சநீதி மன்றத்தின் இ-குழு உறுப்பினராக (மனிதவளங்கள்), உள்ளார்.

    • தமிழ்நாடு நீதித்துறையில் 2003 ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்து வருகிறார்.
    • மாவட்ட நீதிப்பணிகளில் 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
    • இ-குழுவில் சேருவதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களிலும் தமிழ்நாடு நீதித்துறை நீதிபதிகள் பயிற்சியகத்தில் சிறப்பு பணி அலுவலராகப் பணிபுரிந்துள்ளார்.
    • UBUNTU மற்றும் CIS ஆகியவற்றில் தலைமை பயிற்சியாளர்.
    • இணையவழி குற்றத்தடுப்பு தலைமை பயிற்சியாளர். (ஹைதராபாத் தேசிய காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்)
    • நீதித்துறைப் பணியாளர்களுக்கு UBUNTU மற்றும் CIS குறித்து பல பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார்.
    • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீதித்துறை அலுவலர்களுக்காக இணையவழி குற்றம் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார்.

    அவர் எழுதியுள்ள புத்தகங்கள்

    1. CIS எளிமையான வழிகாட்டி [ Easy Guide for CIS]
    2. வழக்கு தகவல் ஏற்பாட்டு முறை 2.0 (CIS 2.0.) [Case information system 2.0.]
    3. வழக்கு தகவல் ஏற்பாட்டு முறை 3.0 (CIS 3.0.) [Case information system 3.0.]
    4. Vidyo வாயிலான காணொலிக்காட்சி முறை [ Video conferencing through Vidyo]
    5. Justis கைபேசி செயலி வாயிலாக வழக்கு மேலாண்மை. [Case management through Jusitis mobile app.]
    6. இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான வழிகாட்டிக் குறிப்பு. [Step by step guide for e-filing in High courts and District courts of India.]