Close

    நீதியரசர். திரு. Dr. D.Y. சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதி

    Dr Justice Dhananjaya Y Chandrachud
    • பதவிப்பெயர்: தலைவர்

    புது தில்லியிலுள்ள புனித.ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். புது தில்லி பல்கலைக் கழகத்தின் கேம்பஸ் சட்ட மையத்தில் சட்டப் படிப்பில் இளங்கலை பட்டமும், ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் மற்றும் முதுசட்டம் மற்றும் சட்ட அறிவியல் முனைவர் பட்டமும் பெற்றவர். மகாராஷ்டிர மாநிலத்தின் வழக்கறிஞர் கழகத்தில் (Bar Council) பதிவு பெற்றும் பம்பாய் உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய உச்சநீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு தலைமை வழக்கறிஞராகவும் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.

    • 29.03.2000 அன்று பம்பாய் உயர்நீதி மன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். மகாராஷ்டிரா நீதித்துறை கல்வி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
    • 31.10.2013 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
    • 13.05.2016 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
    • மும்பை பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட ஒப்பியல் கெளரவ விரிவுரையாளர் ஆவார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒக்கலஹாமா சட்டப்பள்ளி பல்கலைக்கழகத்தின் கெளரவ விரிவுரையாளர் ஆவார்.
    • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம், ஹார்வர்டு சட்டப்பள்ளி, யேல் சட்டப்பள்ளி தென் ஆப்பிரிக்காவிலுள்ள விட்வாட்டர்செரண்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது விரிவுரைகளை வழங்கியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் , பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.