Close

    திரு.குல்தீப் சிங் ஹூஷ்வா

    Kuldeep Singh Kushwah
    • இணையவழி அஞ்சல்: ms-ecommittee[at]aij[dot]gov[dot]in
    • பதவிப்பெயர்: உறுப்பினர் - அமைப்புமுறை

    1999 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பி.டெக் படிப்பை முடித்தவர்.2004 ஆம் ஆண்டு பொறியியலில் முதுகலைப் பட்டப் படிப்பினையும் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜபல்பூரில் இளங்கலை சட்டப்படிப்பினை முடித்தவர். 06.02.2017 முதல் 31.09.2018 வரையில் இந்திய உச்சநீதி மன்றத்தில் OSD(IT) ஆக பணியமர்த்தப்பட்டார்.02.06.2008 முதல் மத்தியப்பிரதேச உயர்நீதி மன்றத்தில் பதிவாளர் (IT) ஆக நியமனம் செய்யப்பட்டதுடன் மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளையும் கவனித்து வந்தார்.

    சாதனைகள் (தொழில்நுட்பம்):

    • 2019 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் இணையவழி சான்றளிக்கப்பட்ட நகல் மென்பொருள் மேம்பாட்டை செயல்படுத்தியது.
    • மத்திய பிரதேசத்தில் 2020 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் பதிவேடுகளை மின்பிரதியாக்க In house DMS ஐ உருவாக்கி செயல்படுத்தியது .
    • உச்ச நீதிமன்ற கணினிமயமாக்கம்:- மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ. J.S.கேஹர் ஆகியோரால் புதுதில்லி விஞ்ஞான் பவனில் 10.05.2017 அன்று நடைபெற்ற விழாவில் ICMIS மென்பொருளுக்கும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளத்திற்கும் பணியாற்றியுள்ளார்.
    • மத்தியப்பிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மென்பொருள் வாயிலாக நீதித்துறை இணையதளத்திற்கு புள்ளியியல் துறையின் கணக்கு விவர அறிக்கை தானியங்கி முறையில் பெற பணிபுரிந்துள்ளார்.
    • நிதித்துறை மென்பொருளுடன் சேர்த்து அதாவது டி.சி.எஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இணையவழி கருவூலம் இணையவழி நீதிமன்றக் கட்டணங்கள் மென்பொருளை ஒருங்கிணைத்தல்.
    • 2018 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு கீழமை நீதிமன்றங்களுக்கும் கொள்முதல் செய்த வன்பொருள்கள் அனைத்திற்கும் இருப்பு மற்றும் புகார் மேலாண்மை மென்பொருள் கொள்முதல் செய்யப்பட்டன.
    • இணையதளம் வாயிலான தகவல் பெறும் உரிமைச் சட்ட மென்பொருள் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    • மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் CMIS மென்பொருளுக்கான cloud தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டது.
    • மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திலும் கீழமை நீதிமன்றங்களிலும் மின்னணு வருகைப்பதிவேடு செயல்படுத்தப்பட்டது.
    • மத்திய பிரதேச உயர்நீதிமன்ற மென்பொருளுடன் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தை ஒருங்கிணைத்தல் : – உயர்நீதி மன்றத்தின் தரவுகளை பதிவிறக்கம் செய்வதற்கு/ பார்வையிடுவதற்கு /நகலெடுப்பதற்கு / தலைமை வழக்கறிஞர் அலுவலக அலுவலர்களுக்கு 2016 ஆம் ஆண்டு உள்ளீட்டு அடையாளம் (Login-ID) மற்றும் கடவுச்சொல் (password) வழங்கப்பட்டது
    • உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை அலுவலர்கள்/ பணியாளர்கள் மற்றும் கீழமை நீதிமன்றத்தின் பணியாளர்களுக்கான தனிநபர் தகவல் தொகுப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
    • இந்தியன் லா ரிப்போர்ட்டர் மற்றும் நீதித்துறை அலுவலர் பயிலக பருவ இதழ் மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
    • உயர் நீதிமன்றத்திற்கான CMIS மென்பொருளை உருவாக்கி செயல்படுத்துதல் :- இந்த மென்பொருள் (ERP) நிறுவன வள திட்டமிடல் கோட்பாடு அடிப்படையிலானது, இதன் வாயிலாக உயர் நீதி மன்றத்தின் வருங்கால வள வாய்ப்புகளின் தேவையை நிறைவேற்றுவதற்கு மனிதவளம், உட்கட்டமைப்பு வசதி, நேர மேலாண்மை முதலியன போன்ற ஒவ்வொரு வளமும் உரியவாறு பயன்படுத்தப்படும். அனைத்துப் பணியாளர்களுக்கும் கணினி முறையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை செய்து முடிப்பதற்கு, பொறுப்புடையவர் ஆவர்.இந்த மென்பொருளானது பணியாளர்கள் தங்களது அன்றாடப் பணிகளை எளிதாக செய்து முடிக்கவும், கண்காணிக்கவும், தேவையற்ற சிரமங்களைக் குறைக்கவும், அவர்களது பணித்திறனை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். இணையவழி குறிப்பாணை மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டு சம்பந்தப்பட்ட பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படலாம். வழக்குகள் காலமுறை வரிசைப்படி பட்டியலிடப்படுவது மற்றும் 2014 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் பணியில் இருந்த நீதிபதிகளுக்கிடையே குறிப்பிடப்பட்ட முன்னுரிமை அளித்து சரிசமமான அளவில் வழக்குகள் ஒதுக்கப்படுவதை தானியங்கி தோற்றுவிப்பு கணினி மென்பொருளானது உறுதிசெய்கிறது.
    • 2014 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் குடும்ப நீதிமன்றங்களுக்கான CMS இருமொழி வலைத்தளம் உருவாக்கப்பட்டது.
    • பல்வேறு குடிமக்கள் சேவை விண்ணப்பங்களுக்கான அலுவலகத்திற்குள்ளான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஏற்பாட்டு முறை உருவாக்கப்பட்டு மற்றும் செயல்படுத்தப்பட்டது.
    • 2013 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் குடும்ப நீதிமன்றங்களுக்கான அலுவலகத்திற்குள்ளான செய்முறை மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

    சாதனைகள் (நிர்வாகம்) :

    • மத்திய பிரதேச மாநில நீதித்துறை குழுமத்தின் இயக்குநர் & பதிவாளரிடம் (உட்கட்டமைப்பு & பணிகள்) கலந்தாலோசிக்கப்பட்டதன்பேரில் தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய 14 ஆம் மற்றும் 15 ஆம் நிதிக்குழு பணிகள் தொடர்பாக காணொலி கண்காணிப்பு, தொழில்நுட்ப பணியாளர் திறன், எண்ணியமாக்குதல் மற்றும் உள்ளூர் வலை பரப்பு மற்றும் அது தொடர்புடைய ஒப்பந்தங்களுக்கு மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும் தொடர்புடைய ஒப்பந்தப்புள்ளிகள் (e-tender).
    • வெளி கொள்முதல் முறையிலான தொழில்நுட்பம் மற்றும் பிற பணியாளர்கள் தொடர்புடைய பணிகள்.
    • அனைத்து மாவட்டம் மற்றும் கீழமை நீதிமன்ற வளாகங்கள் , மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தொடர்புடைய சிறைகளில் காணொலிக்காட்சி திரை வசதியினை நிறுவுதல். மத்திய பிரதேசம் ஜபல்பூர் உயர் நீதிமன்றத்திலும் அதன் குவாலியர் கிளையிலும் காணொலிக்காட்சி வசதிகளுக்கு வகைசெய்தல். மாநில நீதித்துறை அமைப்பு மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆனணயங்களை கணினிமயமாக்குதல். (மின்பிரதியாக்கம் – Digitization) முதலியன வாயிலாக நீதிமன்ற மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்.
    • தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான சாதனங்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் பல்வேறு கணக்குத் தலைப்புகளில் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை தயார் செய்தல்.
    • மாநில நீதித்துறைப் பயிலக ஒருங்கிணைப்புடன் இணைந்து அனைத்து நீதித்துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு வெவ்வேறு தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து ஆண்டு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.